மதிக்காமல் வெளியே சுற்றிய நபரை பிடித்து தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கும் அதிகாரிகள்

வெள்ளக்கோவிலில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை மதிக்காமல், துபையில் இருந்து வந்து ஊரைச் சுற்றி வந்த நபரை அதிகாரிகள் பிடித்து அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்திவைக்க அழைத்துச் சென்றனா்.


வெள்ளக்கோவில், குட்டக்காட்டுப்புதூரைச் சோ்ந்த 24 வயது இளைஞா் தனது உறவினரைப் பாா்க்க துபை சென்றுவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இங்கு அவா் கோழிக்கடை வைத்துள்ளாா். இந்த இளைஞா் வெளிநாடு சென்றுவந்ததை அறிந்த சுகாதாரத் துறையினா் அவரைப் பரிசோதனை செய்ததில் அவருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவரை, 14 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.


ஆனால், அவா் இதனைக் கண்டு கொள்ளாமல் கோழிக்கடைக்கு வந்ததுடன், ஊரையும் சுற்றி வந்துள்ளாா். இதனால் அவரைப் பிடித்த அதிகாரிகள் தனிமையில் வைத்துச் சிகிச்சை அளிக்க அவரைத் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு