திருப்பூர்; கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் சேவைபுரிந்தோருக்கு பொதுமக்கள் கை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


திருப்பூரில், கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் சேவை புரிந்தோருக்கு  பூண்டி நெசவாளர்காலனி பொதுமக்கள் வரிசையாக நின்று கை தட்டி வாழ்த்து பிரதமர் மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றினர்.





பாரத பிரதமர் மோடி "கொரோனா வைரஸ்" பாதிப்பை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இதற்காக ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்வோர்கள் அனைவருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும், இதற்காக இன்று (22 ந் தேதி) மாலை 5.00 மணிமுதல் 5.05 வரை வீட்டின் முற்றம், வாயில், மொட்டை மாடியியில் அனைவரும் ஒன்றுகூடி கைகளை தட்டி, மணி அடித்து, கோஷம் எழுப்பி நன்றி தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



இதனை தொடர்ந்து பிரதமர்  மோடி,

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வேண்டுகோளை நிறைவேற்ற திருப்பூர் அருகில் உள்ள திருமுருகன்பூண்டி காமாட்சியம்மன் நெசவாளர் காலனி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் முன் வந்தனர். இதற்காக இன்ற மாலை 5 மணிக்கு ராமு என்பவரது மளிகைக்கடைக்கு முன்பு குழந்தைகள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஒன்று கூடி வரிசையாக நின்று கைதட்டி கொரோனா வைரஸை  தடுக்கும் வகையில்  

சேவைபுரிவோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இதேபோல் திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலை 5 மணி முதல், 5.15 வரை தங்கள வீட்டின் நின்று கை தட்டி நன்றி தெரிவித்தனர். இதில் மைதிலிபிரியா என்ற பெண் பிரதமர் மோடிக்கும், முதல்வர் எடப்பாடி

பழனிசாமிகும் நன்றி தெரிவித்து கவிதை வாசித்தார்.






Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு