திருப்பூர்; விவசாய நிலங்களை அரசு பாதுகாக்க ஜி.கே.மணி முதல்வருக்கு கோரிக்கை.




பறவை காய்ச்சல் பீதியால்  பொதுமக்களின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க.வின் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறினார்.

திருப்பூரில்,  பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு திருப்பூர் வந்த அக்கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:-

பொது தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண்மை மேம்படுத்தக்கூடிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்றும்,  தமிழகத்தில் பரவியுள்ள லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு தடுக்க வேண்டும் எனவும், அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதை நிறுத்தி விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதை நிறுத்தி நெடுஞ்சாலை ஓரமாக விவசாய நிலத்திற்கு பாதிப்பில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் எனவும், மேலும் பறவை காய்ச்சல் பீதியால் கோழி விற்பனையாளராக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


செய்தியாளர் சந்திப்பின்போது, 

மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல் கவுண்டர், தொழிற்சங்க செயலாளர் முத்துக்குமார் , துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் , தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் ,  வடக்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் , தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன் ,உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர். 

 




 


 

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image