சிவகாசியில்  நிருபர் கார்த்தி மீது தாக்குதல்; காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.

சிவகாசியில்  நிருபர் கார்த்தி மீது தாக்குதலை கண்டித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.



விருதுநகர் மாவட்டம் , சிவகாசியில் குமுதம் , இதழின் மாவட்டசெய்தியாளர் கார்த்தி மீது நேற்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது  . 



இந்த கொடூர தாக்குதலில் நிலை குலைந்து போன  நிருபர் கார்த்தி சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் கார்த்தியின் மருத்துவ செலவுகளை தமிழக அரசு பொற்பு ஏற்க வேண்டும் , தமிழகத்தில் செய்தியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடந்த வண்ணமாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .  



எனவே செய்தியாளர் கார்த்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கண்டறிந்து   காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்க பட்ட செய்தியாளர் கார்த்திக்கு உதவி தொகை 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் ,   பத்திரிக்கையாளர்களின்  பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு