வருடாவருடம் திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் பள்ளி ஆண்டுவிழா, பணி நிறைவுபெறும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா மற்றும் அறிவியல் தின விழா என முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிராம கல்விக்குழு தலைவர் எஸ்.சிவசரண்யா முன்னிலை வகித்தார். இவர் பேசுகையில் என் பள்ளி என்று ஆரம்பித்தார். தனியார் பள்ளிக்கு நிகரான ஒரு கட்டமைப்பை உருவாக்கி மிக சிறப்பாக நிர்வகித்து வரும் தலைமை ஆசிரியருக்கும் அவரது செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பள்ளியை இந்த அளவிற்கு முன்னேற்ற பாதையில் பயணிக்க உதவும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பேசினார்.
தலைமை ஆசிரியர் ஞானம்மாள் வரவேற்றப்புரையாற்றினார். அவர் பேசுகையில் எங்களது பள்ளியின் இந்த முன்னேற்றத்திற்கு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், கிராம கல்விக்குழு, முன்னாள் ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், இங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள். பெற்றோர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தான் கரணம். நான் முழு அர்ப்பணிப்புடன் எனது வேலையை திறம்பட செய்தேன். அனைவரது ஒத்துழைப்பால் தான் இவைகள் சாத்தியம் ஆனது. மாவட்ட மாநில அளவில் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெற்று பள்ளியின் பெருமையை வளர்த்து வருகின்றனர். வரும் காலங்களில் நிறைய சாதனை புரிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது இவ்வாறு பேசினார்.
இடைநிலை ஆசிரியர் சூ.வளர்மதி ராய் ஆண்டறிக்கை வாசித்தார். மேலும் எம்.ஆர்.ரத்தினசாமி, என்.நாகப்பன், முன்னாள் ஆசிரியர் ஆர்.கந்தசாமி, முன்னாள் ஆசிரியர் கனகராஜ், என்.தெய்வசிகாமணி, ஆதவன் முருகேசன், தம்பி குமாரசாமி, என்.ஜெகநாதன், ஜோதி சிவபாக்கியம்,
தலைமை ஆசிரியர், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. புரவலர் திட்டத்தின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் பள்ளிக்கு நன்கொடை கொடுத்து உதவியவர்களுக்கும் பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர்.