சென்னை வில்லிவாக்கத்தில் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்ட நிலையில் தாய் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் 15 வயதுள்ள அந்த சிறுவன் அவரது தங்கை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தாயும், தந்தையும் இல்லாத நேரத்தில் தங்கையின் கை,கால்களை கட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் பல முறை சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளித்தோழியிடம் தெரிவித்துள்ளார். தோழி மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சிறுவனை கைது செய்து காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறுவன் செல்போன் வைத்திருந்ததை அடுத்து இது தொடர்பாக வீடியோ பதிவு எதுவும் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.