தெற்கு இரயில்வேயின் சேலம் பிரிவில் இரயில்கள் சேவையில் தற்காலிகமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன் விபரம் வருமாறு:-
பெங்களூரு பிரிவில் பொறியியல் பணி நடைபெறுவதால் 21.03.2020 மற்றும் 22.03.2020 அன்று சேலம் பிரிவு வழியாக வரும் / கடந்து செல்லும் இரயில் சேவைகளுக்கு பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இரயில் சேவைகளை ஓரளவு ரத்து செய்தல்
1. இரயில் எண்: 12678 எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் 21.03.2020 அன்று பெங்களூரு கன்டோன்மென்ட்-பெங்களூர் நகரத்திற்கு இடையே ரத்து செய்யப்படும்.
2. இரயில் எண்: 12677 கே.எஸ்.ஆர் பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 22.03.2020 அன்று பெங்களூர் நகரம் - பெங்களூர் கண்டோன்மென்ட் இடையே ரத்து செய்யப்படும்
3. இரயில் எண்: 17236 நாகர்கோயில் - கே.எஸ்.ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் 21.03.2020 அன்று பெங்களூரு கன்டோன்மென்ட்-பெங்களூர் நகரத்திற்கு இடையே ரத்து செய்யப்படும்
4. இரயில் எண்: 17235 கே.எஸ்.ஆர் பெங்களூரு - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் 22.03.2020 அன்று பெங்களூர் நகரம் - பெங்களூர் கண்டோன்மென்ட் இடையே ரத்து செய்யப்படும்
5. இரயில் எண்: 22666 கோவை - கே.எஸ்.ஆர் பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் கிருஷ்ணராஜபுரம் - பெங்களூர் இடையே 22.03.2020 அன்று ஓரளவு ரத்து செய்யப்படும்
6. இரயில் எண்: 22665 கே.எஸ்.ஆர் பெங்களூரு - கோயம்புத்தூர் உதய் எக்ஸ்பிரஸ் 22.03.2020 அன்று பெங்களூர் - கிருஷ்ணராஜபுரம் இடையே ஓரளவு ரத்து செய்யப்படும்
7. இரயில் எண்: 56241 சேலம் - யஸ்வந்த்பூர் பயணிகள் இரயில் 22.03.2020 அன்று பனஸ்வாடி - யஸ்வந்த்பூர் இடையே ஓரளவு ரத்து செய்யப்படும்.
8. இரயில் எண்: 56242 யஸ்வந்த்பூர் - சேலம் பயணிகள் இரயில் 22.03.2020 அன்று யஸ்வந்த்பூர் - பனஸ்வாடி இடையே ஓரளவு ரத்து செய்யப்படும்.
இரயில் சேவைகளை திசை திருப்புதல்
1. இரயில் எண்: 11014 கோயம்புத்தூர் - மும்பை எல்.டி.டி எக்ஸ்பிரஸ் 22.03.2020 அன்று திருப்பி, சேலம்-ஜோலர்பேட்டை-ரெனிகுண்டா- குடப்பா - குண்டக்கல் வழியாக மும்பை திருப்பி விடப்படும்.
2. இரயில் எண்: 11013 மும்பை எல்.டி.டி- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 21.03.2020 அன்று குண்டக்கல், கடப்பா, ரெனிகுண்டா, ஜோலர்பேட்டை, சேலம் வழியாக கோயமுத்தூர் திருப்பி விடப்படும்.
மேற்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.