கணவனை கொன்ற வழக்கில் தொலைப்பேசி மூலம் விசாரித்து இடைக்கால ஜாமீன்

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தணிகைவேலன் என்பவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி ரேகாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26 ம் தேதி, தணிகைவேலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுசம்பந்தமாக விசாரித்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், தணிகைவேலனை மனைவி ரேகா தான் கொலை செய்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


தனியாக இருக்கும் தனது 19 வயது மகளையும், 14 வயது மகனையும் கவனிக்க வேண்டியுள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, ரேகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை, தொலைப்பேசி மூலம் விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதாலும், இரு குழந்தைகளையும் கவனிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, ரேகாவுக்கு ஏப்ரல் 27 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


 


 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image