சட்டசபையில் CAA NRC NPR க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அதிமுக அரசு அறிவித்த உடன் சேலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்து ஜமாஅத் சார்பில் ஒன்று திரண்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப் பெரிய ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களும் கைதாகி நேரு கலையரங்கத்தில் தங்க வைக்க பட்டுள்ளனர். இதில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் இமாம் மொய்தீன் உட்பட ஏராளமான மஜ்லிஸ் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.