கொரானா தொற்று நிவாரண பொருட்கள்...
ரூ.65 லட்சத்தில், அரிசி, 16 வகை மளிகை சாமான்களுடன்
10 ஆயிரம் கிட்டுகள் ரெடி....!
21 வார்டுகளுக்கும் வீடு, வீடாக வழங்க சு.குணசேகரன் எம்.எல்.ஏ., திட்டம்...!
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஏற்பாட்டில், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரண உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.65 லட்சம் மதிப்பில், 10 ஆயிரம் சிப்பங்கள் அரிசி, பருப்பு உள்பட 16 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை, எம்.எல்.ஏ., சு.குணசேகரன் திரட்டினார். அவற்றை தொகுதியில் உள்ள 21வார்டுகளுக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி பல்லடம் ரோட்டில் உள்ள
ச்்பராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு, ரூ.65 லட்சம் மதிப்பிலான பொருட்களை, 21 வார்டுகளுக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் அவற்றை வார்டு வாரியாக பகுதி செயலாளர்கள்
ஆலோசனையின்படி கிளை நிர்வாகிகள் அவற்றை பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று விநியோகம் செய்து வருகின்றனர்.