திருப்பூர்; எம்.எல்.ஏ.,குணசேகரன் வழங்கிய மருத்துவ வாகனம் மூலம் 100 பகுதியில் கொரானா. தொற்று பரிசோதனை!
திருப்பூர் மாநகரட்சி பகுதியில்

கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 


தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,

சு.குணசேகரன் வழங்கிய நடமாடும் மருத்துவமனை (ஆம்புலன்ஸ்) வாகனம் மூலம் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர மருத்துவ பரிசோதனை நடந்தது.


திருப்பூர் மாநகரட்சிக்குட்பட்ட


தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த ஆணையிட்டதின் அடிப்படையில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், "அம்மா டிரஸ்ட்"  நிறுவனருமான

சு.குணசேகரன், திருப்பூர் மாநகரட்சிக்குட்பட்ட60 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் மருத்துவர்கள்

கொரோனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக திருப்பூர் மாவட்ட அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மூலம், மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார் வசம் வழங்கிய

நடமாடும் மருத்துவமனை (ஆம்புலன்ஸ்) வாகனம் மூலமாக கடந்த 17, 18, 19, 20 ஆகிய நான்கு நாட்கள் ராயபுரம், சூசையாபுரம்,

பெரியாண்டிபாளையம், எஸ்.ஆர்.நகர், பாரப்பாளையம், கே.வி.ஆர்.நகர், கருவம்பாளையம், ராக்கியாபாளையம், ஆர்.இ.வி.லே-அவுட் தென்னம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளடக்கிய 100 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவைபடுகின்றவர்களுக்கு

மருந்துகள் வழங்கப்பட்டது.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image