திருட்டுத் தனமாக மது விற்ற திரௌபதி பட நடிகர்; ரூ.1000 கொடுத்து வாங்கி அதை நண்பர்களுக்கு ரூ.1200க்கு விற்பனை

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு , கள்ளச்சாரயம் காய்ச்சுவதும் காவல் துறை அவர்களை கைது செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. சென்னையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்த நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட  திரெளபதி பட துணை நடிகர் ரிஸ்வான் (30) என்பவரை போலிசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து  57 குவார்ட்டர் பாட்டில்கள்,  12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின்படி சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா புரொடக்‌ஷன் வேலை பார்க்கும் பிரதீப் (31) மற்றும் அவரது வாகன ஓட்டுனரான சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (41) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும்  தேவராஜ் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. திரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சினிமா துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1200க்கு விலை பேசி அதை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு திரைத்துறையில் , நடிகர் கதாபாத்திரத்தில் நடித்த நபர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு