தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சார்பில், அம்மா உனவகங்களில் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை, தினமும் தலா ஆயிரம் பேருக்கு 5 வகை கலவை சாதம், முட்டை மற்றும் வாழைப்பழம் ஆகியவை எம்.எல்.ஏ சு.குணசேகரன் சொந்த செலவில் வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி காங்கேயம் ரோடு, நல்லூர் அம்மா உணவகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் முன்னிலையில், எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். இதில் 3வது மண்டல உதவி ஆணையாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் கனகராஜ், சுகாதார அலுவலர் பிச்சை, ரோபோ ஆனந்த், அம்மா உணவாக பொறுப்பாளர் கோமதி சம்பத், தம்பி சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமும் தலா 1000 பேருக்கு 5 வகை சாதம், முட்டை மற்றும் வாழைப்பழம்; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.