திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு காலை மற்றும் மாலை என தினசரி 2 வேளை கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காலை மற்றும் மாலை 2 வேளை கபசுர மூலிகை குடி நீர் சுத்தமான, சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.கொரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் இது உதவும் என்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்றும் அறிவியல் ரீதியாக தெரிய வருகிறது.
இன்று சுமார் 1000 பேருக்கு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி.கே.விவசாயமணி கபசுர மூலிகை குடிநீர் வழங்கினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடை வெளியையும் கடைப்பிடித்தும் இந்த மூலிகை குடிநீர் வாங்கி அருந்தினர்.