கோவை நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது
கோவை நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் கோவை மாவட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், முதியோர் இல்லக் காவலர்கள் மற்றும் வடமாநில இளைஞர்களுக்கு என சுமார் 1000 பேருக்கு கோவை காளப்பட்டி அருள்மிகு கொங்கு ஸ்ரீ வடுகநாதர் திருக்கோவில் மண்டபத்தில் சிக்கன் பிரியாணி உணவு தயாரிக்கப்பட்டு அரிமா சங்க மண்டலத்தலைவர் காளியப்பன், முன்னாள் தலைவர் அரிமா பாஸ்கர், செயலாளர் செந்தில்குமார், முன்னாள் வட்டாரத்தலைவர் லோகநாதன், பிந்துபாலு, குறிஞ்சிமலர் பழனிசாமி, குபேந்திரன், ஜே.ஜே .ஜெகதீஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில் கார்த்திகேயன், காளப்பட்டி அரிமா துரைசாமி, செயலாளர் நந்தகுமார், தலைவர் லாலா ஜி.முத்துராஜ், ஜி.எஸ்.டி. உறுப்பினர் ரகுராமன், வட்டாரத்தலைவர் ரகுபதி, கனகராஜ், பொருளாளர் தேவராஜ் ,
லேண்ட் மர்ட் செமீக் அரிமா வசந்த், மோகன்தாஸ், ஹரிஷ் பரிமளம்,
காளப்பட்டி சாமி, பாலசுப்ரமணியம் மனோகரன், வடுகநாதர் சுப்ரமணி, டாக்டர். பிரசன்ன மணிகண்டன், அக்ஷயா பிரகாஷ் காளப்பட்டி பாலு ஆகியோர் முன்னிலையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது
மேலும் 144 தடை உத்தரவு உள்ளவரை கோவை மாநகராட்சி கிழக்குப் பகுதி வார்டு எண்: 33, 34, 35,36 ஆகிய பகுதி தூய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கப்படும் என்பதை நேரு நகர் அரிமா சங்க செயலாளர்
செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.