திருப்பூர்; வடக்கு தொகுதியில் 1000 குடும்பங்களுக்கு அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ.விஜயகுமார் ஏற்பாடு!
 

 

திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள 'அம்மா' உணவங்களில் எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் சொந்த நிதியில் 1000 குடும்பங்களுக்கு  விலையில்லா உணவு வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் கொரானா தொற்று ஊரடங்கு காலம் முடியும் வரை தினசரி 1000 பேருக்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார் சொந்த செலவில் விலையில்லா உணவு வழங்கும் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்து பொது மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன் மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார் உள்ளிட்பட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம், ,அய்யம்பாளையம், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய மளிகை பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சங்கீத சந்திரசேகர், கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத் தலைவர் மேக்னம் பழனிசாமி, சௌந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு