திருப்பூர் காந்தி நகர் லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில்
1000 பேருக்கு கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.
திருப்பூர் காந்தி நகர் லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில்
இன்று (13.04.2020) காலை கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக கபசுர மூலிகை குடிநீர் சிங்காரவேலன் நகர், பத்மாவதிபுரம் ஆகிய பகுதிகளில்
உள்ள சுமார் 1000 பேருக்கு வழங்க பட்டது.
இந்த மூலிகை குடிநீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்றும், தொடர்ந்து வரும் 3 நாட்களுக்கு காலை 7 மணிக்கு வழங்கப்படும் என்றும், இந்த வாய்ப்பினை பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றும், இந்த கபசுர மூலிகை குடிநீர் காய்ச்சுவது முதல், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரை உதவி புரிந்த சங்க செயலாளர்.பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏ.வி.பி., லேஅவுட் குடியிருப்போர் நல சங்க தலைவர் டி.என்.துரை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.