சீனாவுக்கு 149 பில்லியன் யூரோவுக்கு பில் அனுப்பிய ஜெர்மனியின் பில்ட் பத்திரிக்கை

கொரொனா வைரஸை வேண்டுமென்றே சீனா பரப்பியதாக தெரியவந்தால், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்து இருந்தார். இங்கிலாந்தும் , பிரான்ஸ்ம் இதே போல் கொரோனா வைரஸுக்கு சீனா தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தனர். சீனாவின் வூகான் வைரஸ் லேபரரெட்டரியிலிருந்து தான் கொரோனா வந்துள்ளது. இறைச்சி மார்க்கெட்டிலிருந்து அல்ல என்று இங்கிலாந்து தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் பில்ட் பத்திரிக்கை 149  பில்லியன் யூரோவுக்கு  சீனாவுக்கு பில் அனுப்பியுள்ளார்கள். 


வரிசையாக பல்வேறு இனங்களுக்காக தொகையை குறிப்பிட்டுள்ள பத்திரிக்கை சுற்றுலாத் துறையின் வருமான இழப்பு 27 பில்லியன் யூரோ, ஜெர்மன் சினிமாத்துறைக்கு இழப்பு 7.2 பில்லியன் யூரோ, லூப்தான்ஸா விமான நிறுவனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 1 மில்லியன் யூரோ இழப்பு, ஜெர்மன் சிறு தொழில்களுக்கு 50 பில்லியன் இழப்பு என்று பட்டியலிட்டுள்ளனர். பில்ட் பத்திரிக்கையின் 149 பில்லியன் யூரோ பில் என்பது, ஜெர்மனியின் பிற நாட்டினர் மீதான வெறுப்புணர்ச்சியும், அவர்களின் தேசியவாதமும் தான் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. உலக நாடுகள் ஒவ்வொன்றாக கொரோனா வைரஸ்க்கு காரணம் சீனா தான் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். கொரோனாவிற்கு மருந்து தயாரிக்க பல நாடுகள் ஆராய்ச்சியில் உள்ளது. சில நாடுகளில் செப்டம்பரில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image