திருப்பூர்; 1500 பேருக்கு மூலிகை குடிநீர் வழங்கல்
திருப்பூர் காந்திநகர் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 3வது நாளாக மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.

திருப்பூர் காந்தி நகர் லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 

கொரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் கபசுர மூலிகை குடிநீர் தயாரித்து கடந்த 13ந் தேதி முதல் வழங்கி வருகின்றனர்.  குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இன்றும் (15.04.2020) காலையில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக மூன்றாம் நாளாக சுமார் 1500 பேருக்கு கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடை வெளியையும் கடைப்பிடித்தனர்.  

இந்த மூலிகை குடிநீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்றும், தொடர்ந்து வரும் 2 நாட்களுக்கு காலை 7 மணி முதல் வழங்கப்படும் என்றும், இந்த வாய்ப்பினை பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றும், இந்த கபசுர மூலிகை குடிநீர் காய்ச்சுவது முதல், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரை உதவி புரிந்த சங்க செயலாளர்.பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் 

ஏ.வி.பி., லே-அவுட் குடியிருப்போர் நல சங்க தலைவர் டி.என்.துரை பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு