திருப்பூரில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மொத்த பாதிப்பு 78 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வரையிலும் 61 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பேரும், அவிநாசியில் 3 பேர் உடுமலைப் பேட்டையில் இரண்டு பேர் தாராபுரத்தில் ஒருவர் பல்லடத்தில் இரண்டு பேர் மற்றும் திருப்பூர் ஊரகப் பகுதிகளில் 7 பேர் என மொத்தம் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 11 வயது மற்றும் 12 வயது சிறுமிகள் உட்பட 15 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.