திருப்பூர்; 2.50 லட்சம் தூய்மை பணியாளர்க்கு கபசுரக் குடிநீர்! சித்தர் ஸ்ரீசிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள்!!

திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மாநகர நல அலுவலர் டாக்டர்.பூபதி ஆகியோர் ஆலோசனையின் பேரில், தூய்மைப் பணியாளர்கள் 500 பேருக்கு கொரானா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தின் சித்தர் ஸ்ரீசிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தூய்மைபணியாளர்களுக்கு கபசுரக்குடி நீர் வழங்கி பேசியதாவது:-
உலகப் பேரழிவு உருவாகவுள்ள தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள அனைத்து மக்களும் வீட்டில் உள்ளனர் நகரில் நோய் பரவாமல் இருக்கவும் மக்களுக்கு சுற்றுப்புறத்தை சுகாதாரத்தையும் பேணிக்காக்கநகரின் தூய்மை பணியாளர்கள் பாடுபட்டு வருகின்றனர்.அப்படி உள்ளத்தூய்மை பணியாளர்களுக்கும்,  அவர்களின் குடும்பத்தாருக்கும் எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோோர் ஆலோசனைக்குப் பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 1.80 லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.தற்போது திருப்பூரில் நோய் தொற்று வராமல் தடுப்பதற்காக ஒரு லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது  தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம்களிலும் காவல் நிலையம், செக்போஸ்ட்களிலும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கமிஷனர் அலுவலகத்திலும் நில வேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.நகரில் தூய்மை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் தினசரி காலையில் சுடு தண்ணீரில் மஞ்சள் பொடி கலந்து குளித்து வந்தால் அவர்களுக்கு கொரானாதொற்று ஏற்படாது. அவர்கள் பணி முடிந்து  வீட்டுக்கு வரும்போது சுடு தண்ணீரில் வேப்பிலை தலை மற்றும் மஞ்சள் தூள்  கலந்து குளித்து வந்தால் எந்த நோயும் அவர்களை அண்டாது. இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின்போது மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் நாகஜோதி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி நிலைய பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் லோகநாதன், முருகன் திருப்பூர் சரவணன்(லைப் குடிநீர்), ராஜ்குமார், தங்கதுரை, பாலாஜி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு