நெலக்கோட்டை யில் நடைபெற்ற இரத்த தான முகாமில் 20 பேர் இரத்த தானம் செய்தனர்.
கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் கூடலுர் குருதிக் கொடையாளர்கள் குழு ஆகியன சார்பாக இரத்த தான முகாம் நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு இரத்த வங்கி மருத்துவ அலுவலர் முனிவேல் தலைமை தாங்கினார். கூடலூர் குருதி கொடையாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், குணசீலன், ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கூடலூர் இரத்த கொடையாளர் குழுவை சேர்ந்த 20 பேர் இரத்த தானம் செய்தனர். கொரோன நோய்தொற்று குறித்து பயம் பரவி உள்ள நிலையில் தானம் செய்ய தாமாக முன் வந்தவர்களை மருத்துவ குழுவினர் பாராட்டினார்.