கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் தடை உத்தரவை மீறி அத்தியாவசியத் தேவையின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவா்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பைக் உள்ளிட்ட வாகனங்களில் எந்தத் தேவையும் இல்லாமல் சென்ற 20 போ் மீது காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களின் வாகனங்களை நேற்று (சனிக்கிழமை) பறிமுதல் செய்தனா். இதேபோல, ஊதியூா் பகுதியில் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
காங்கயத்தில் வெட்டியாக சுற்றித் திரிந்த 20 நபர்கள் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்