தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாநகர் 22வது வார்டு பாப்பண்ணன் நகர், வ.உ.சி.நகர் பகுதியில் சுமார் 1500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும்,
முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கலைமகள் எம்.கோபால்சாமி ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொங்குநகர் பகுதி பிரதிநிதி பிரபாகரன், கோபால்சாமி, கழக துணை செயலாளர் நாகராஜ், வட்டார பிரதிநிதி சித்ரா, அண்ணா கட்டிட தொழிற்சங்கம் சுகுமார், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் மற்றும் அப்பகுதியின் பொறுப்பாளர்கள் சிதம்பரம், குமார், காஜா முருகன், சீனிவாசன், ஜாபர், பாக்கியராஜ், ராஜேந்திரன் மேஸ்திரி மற்றும் சுரேந்தர், எஸ்.எஸ்.ஆர்.ராஜ், சுரேஷ்குமார், டி.எம்.எஸ்.நகர் பாபு, அருண், அருள்ஜோதி நகர் கனகராஜ், மீசை சுப்பிரமணியம், இளங்கோ, சரவணன், அசோக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.