திருப்பூரில் தொடர்ந்து 22வது நாளாக ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் உணவு பெருமாநல்லூர் அருகில் உள்ள வள்ளிபுரம் கிராமத்தில் சுமார் 400 உணவு இல்லாத ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
இந்த உணவு வழங்கும் நிகழ்வில் குன்னத்தூர் EX.பேரூராட்சி தலைவர் C. உமாமகேஸ்வரி, சென்னியப்பன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கனகராஜா ஆசிரியர், குமார், சிவா தம்பி, அரண்மணை புதூர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு உணவு வழங்கினார்கள்.
உணவில்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒரு நேர உணவு வழங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே என்றும் சமூக பணியில் ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் குளோபல் மு.பூபதி தெரிவித்தார்