திருப்பூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் தனது சொந்த பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்க பாதையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் அவர் தனது தொகுதி மேம்பாட்டு (2020-21) நிதியில் இருந்து கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொன்னம்மாள் ராமசாமி மகப்பேறு மருத்துவமனை, நல்லூர், கே.வி.ஆர்.நகர், மண்ணரை, சூசையாபுரம் ஆகிய
மருத்துவமனைகளுக்கு,
மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.25 லட்சம் வழங்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் மாநகராட்சியில் தூய்மைப்பணியில் மற்றும் சுகாதார பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனது சொந்த நிதியின் மூலம் 20 ஆயிரம் முக கவசங்களை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்திற்கு சென்ற எம்.எல்.ஏ., சு.குணசேகரன், உணவு தயாரிப்பு, தரம் ஆகியவற்றை கேட்டறிந்து உணவு சாப்பிட வருபவர்களிடம் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு குறித்த விளக்கினார். பின்னர் பொதுமக்களுடன் உணவருந்தினார்.
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் மாநகராட்சியில் தூய்மைப்பணியில் மற்றும் சுகாதார பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனது சொந்த நிதியின் மூலம் 20 ஆயிரம் முக கவசங்களை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மாநகராட்சி அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், கண்ணபிரான், ஜவஹர்ராஜ், தம்பி சண்முகசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்