ஊரடங்கு மே 3ம்தேதி வரை தளர்வு இல்லை; தமிழக அரசு அறிவிப்பு
வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.

 

இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா மேலும் பரவுவதை தடுப்பதற்கு கடும் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டி உள்ளதால் ஊரடங்கு மே 3ம்தேதி வரை தளர்வு இல்லை. அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும்’ என தமிழக அரசு கூறியுள்ளது.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு