நெசவாளர் நலவாரிய உறுப்பினர்கள் நிவாரண உதவித்தொகையை பெற ஆவணங்களை வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் 17 வகையான நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வீதம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி பட்டு மற்றும் விசைத்தறி நெசவாளர் நல வாரியங்களில் 16 ஆயிரத்து 404 உறுப்பினர்கள் உள்ளனர். 


vanakkam tiruppur



இவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் வகையில் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6 ஆயிரத்து 558 நெசவாளர்கள் மட்டுமே தங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை அளித்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் தங்களது பெயர், நலவாரிய பதிவு எண், செல்போன் எண், நலவாரிய புத்தகத்தின் முதல் பக்க நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

 

மேலும் அந்தந்த தாலுகாவாரியாக கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பிவைக்கலாம். அதன்படி திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு 99446 33046 என்ற எண்ணிலும் அவினாசி தாலுகாவுக்கு 94439 93058 என்ற எண்ணிலும், பல்லடம் தாலுகாவுக்கு 88838 45450 என்ற எண்ணிலும், ஊத்துக்குளி, தாராபுரம் தாலுகாவுக்கு 88385 22752 என்ற எண்ணிலும், காங்கேயம் தாலுகாவுக்கு 94446 45214 என்ற எண்ணிலும், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்கு 77083 94747 என்ற எண்ணிலும் வாட்ஸ்-அப் மூலமாக மேற்கண்ட ஆவணங்களை வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image