திருப்பூரில் ஒரே நாளில் 35 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி; மொத்தம் பாதித்தவர்கள் 60 ஆக உயர்வு
திருப்பூரில் 60 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.  திருப்பூர் மாநகர், மற்றும் அவிநாசியில் பாதிப்பு  அதிகமாக உள்ளது. 

 

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

 

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நாட்கள் முதல் நேற்று வரை 26 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் பொழுது  திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 35 பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதில் முதலாவதாக உறுதி செய்யப்பட்ட நபர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ள தால் தற்பொழுது 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 35 பேரில் ஆண்கள் 17 பேர் மற்றும் பெண்கள் 18 பேர் என தெரியவந்து உள்ளது. குறிப்பாக திருப்பூரில் 11 பேர், அவிநாசியில் 15 பேர், மங்கலத்தில் 2 பேர் மற்றும் தாராபுரத்தில் 7 பேர் என மொத்தம் 35 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் ஒரே தொற்றில் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு