திருப்பூர்; கொரொனா வைரஸ் பாதிப்பு. வெளி மாநில தொழிலாளர்களை கண்டறிந்து, நிவாரணம் வழங்க அமைச்சர் உத்தரவு!



 

 

வெளியூர் மற்றும்  வெளி மாநிலத்தைச் சேர்ந்த கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் இனம் கண்டறிந்து நிவாரணப் பொருட்களை வழங்க கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தெரிவிக்கையில் , 


வெளிமாவட்டத்தை காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் குறைவாக உள்ளது. அதனை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருவதால், நோய்த் தொற்றுப் பாதிப்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டத்திற்கு நிவாரணத் தொகையாக 7 லட்சத்து 25 ஆயிரத்து 990 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் 89 சதவிகிதம் அதாவது 6 லட்சத்து 45 ஆயிரத்து 926 நபர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண பொருட்கள் மற்றும் தலா ரூ 1000 வழங்கப்பட்டுள்ளது.இதில் புதிதாக 58 ஆயிரத்து 248 நபர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தவிர , ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 665 வெளிமாநில தொழிலாளர்கள் நிவாரணப்பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாதவர்கள் இம்மாத இறுதிவரை கூட்டுறவுத்துறை மூலம் அந்தந்த ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இதில் சிறந்த முறையில் பணியாற்றிய கூட்டுறவு துறை அதிகாரிகளும், ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். 

திருப்பூர் தொழில் நிறைந்த நகரம் என்பதால் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தைச்சேர்ந்த பெரும்பாலோனோருக்கு ரேஷன் அட்டை இல்லாமல் இருப்பதால் அவர்களில் கஷ்டப்படும் நபர்களை இனம் கண்டறிந்து நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், உடல்நிலை பாதிக்கப் பட்டவர்களின் நிலையை மனதில் கொண்டு ஒவ்வொரு ஊர்களுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் ரத்தக் கொதிப்பு மாத்திரை உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து பொருட்களை அந்தந்த துணை சுகாதார நிலையம் மூலமாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 


கூட்டத்தில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாநகர காவல் துணை ஆணையர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்



 


 

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image