திருப்பூரில் முழு ஊரடங்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மாநகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர். இருப்பினும் நேற்று காலை தேவையில்லாமல் சுற்றிவந்த வாகன ஓட்டிகளை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 7 மணி வரை திருப்பூர் மாநகரில் மொத்தம் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 123 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 104 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் நேற்று இரவு 7 மணி வரை திருப்பூர் புறநகரில் போலீசார் 260 வழக்குகள் பதிவு செய்து 260 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று மொத்தம் 383 பேர் கைது செய்யப்பட்டனர். 305 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.