திருப்பூரில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலமாக 4 லட்சம் முகக்கவசங்கள்

திருப்பூரில் தயாரிக்கப்பட்ட  4 லட்சம் முககவசங்கள் கேரளாவுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை கொண்டு செல்ல சென்னை-சொரனூர் வரை சிறப்பு சரக்கு ரயில் இயக்கப் பட்டு வருகிறது. கேரள மாநிலம் சொரனூரில் இருந்து நேற்று அதிகாலையில் புறப்பட்ட ரயில் காலை 6.45 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. திருப்பூரில் இருந்து சென்னைக்கு 11 பண்டல்களில் 50 ஆயிரம் முககவசம் அனுப்பி வைக்கப்பட்டது. இது போல் சென்னையில் இருந்து சொரனூர் நோக்கி சென்ற ரயில் நேற்று மாலை திருப்பூர் வந்தது. இந்த ரெயிலில் 86 பண்டல்களில் 4 லட்சம் முககவசம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை திருப்பூர் ரெயில் நிலைய வணிகப்பிரிவு மேலாளர் முத்துக்குமார்  தலைமையில் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு