தமிழகத்திற்கு 40, 032 பிசிஆர் கிட் (PCR Kits) - டாடா நிறுவனம் வழங்கியது

கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கு, தமிழக அரசுக்கு, டாடா நிறுவனம் சார்பில் 40, 032 பிசிஆர் கிட் (PCR Kits) வழங்கப் பட்டுள்ளது. இதன் மதிப்பு 8 கோடி என்று கூறப்படுகிறது. மொத்தம் 40 ஆயிரத்து 32 உபகரணங்கள் தமிழக அரசுக்கு வழங்கப் பட்டுள்ளது. டாடா நிறுவனம் இது போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளதற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.



பிசிஆர் கிட்ஸ் என்பவை, நோயை சரியாக கண்டுபிடித்துவிடும். Polymerase chain reaction என்பதன் சுருக்கம்தான், பிசிஆர். அதிக ஆபத்து உள்ள நோயாளிகளுக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ் பலன்தராது. பி.சி.ஆர் சோதனைதான் சரியாக கண்டுபிடிக்கும். சமூக அளவிலான பரவலான சோதனைகளுக்கு வேண்டுமானால், ரேப்பிட் டெஸ்ட் பயன்படும். ரேப்பிட் டெஸ்ட்டில், பாசிட்டிவ் காட்டினால் உடனே சிகிச்சை தொடங்கப்படாது. பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தி, அதிலும் பாசிட்டிவ் வந்தால்தான், சிகிச்சை கொடுக்கப் படும். எனவேதான் ரேப்பிட் டெஸ்ட் கருவி சீனாவிலிருந்து இன்னும் தமிழகம் வராதது குறித்து பெரிதாக சுகாதாரத்துறை கவலைப்படவில்லை. ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் மருத்துவ முறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் அதிக சோதனைகளை நடத்த வாய்ப்பு ஏற்படும். இதனால்தான் ரேப்பிட் டெஸ்ட் கருவி தேவை. ஆனால் டாடா கொடுத்துள்ள பிசிஆர் வகை சோதனை கருவிகள்தான், மிகவும் துல்லியமானவை. எனவே, தமிழகத்திற்கு இந்த கருவி நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image