திருப்பூர் 45வது வார்டு தூய்மைப்பணியாளர்கள் 200 பேருக்கு அரிசி, காய்கறி உணவு பொருட்களை அண்ணா தொழிச்சாங்க மாவட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமையில் அதிகாரிகள் வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர்
ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., .சு.குணசேகரன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் ஏற்பாட்டில், மாநகராட்சி 45வது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள்,வாகன ஓட்டுனர்கள் என 200 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பெருட்களை பழைய பஸ் நிலையம் அருகில் தண்ணீர் டேங்க் வளாகத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும், 45வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான எம்.கண்ணப்பன் தலைமையில், மாநகராட்சி 3வது மண்டல உதவி ஆணையாளர் சுப்பிரமணியம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் முனியாண்டி, சுகாதார அலுவலர் பிச்சை, குடிநீர் ஆய்வாளர் கோகுல்நாதன், சுகாதார ஆய்வாளர் தேவேந்திரன், நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ். கண்ணபிரான், கோழிக்கடை மூர்த்தி மற்றும் பாலமுருகன், மதிவாணன், நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான், பாசறை யுவராஜ் சரவணன், செய்யதுஅலி, சரவணன், ஹைதர்அலி. சந்தோஷ், விஸ்வநாதன், ஆனந்தன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.