கொரோனா தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்தும் தயாராகி விடும் -சாரா கில்பர்ட்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி வரும் செப்டம்பருக்குள் தயாராகி விடுமென பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உறுதியளித்துள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இதுவரை 9 ஆயிரத்து 875 பேர் உயிரிழந்துள்ளனர். 344 பேர் குணமடைந்துள்ளனர். பிரிட்டனில் இன்னும் சில வாரங்களுக்கு கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசின் தலைமை அறிவியல் ஆலோசகரான பேட்ரிக் வலன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலையின் தடுப்பூசி துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் , கொரோனாவுக்கு எதிராக 80 சதவீதம் தடுப்பூசி செயல்படுமென நம்பிக்கை உள்ளது.


செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து தயாராகி விடும். இது ஒரு வெறும் கூச்சல் அல்ல. ஒவ்வொரு வாரமும் கடக்கும் போது தங்களிடம் கூடுதல் தரவுகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். உலகளவில் கொரோனா எதிரான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பல்வேறு குழுக்களில் கில்பர்ட் தலைமையிலான குழுவும் முக்கியமானதாகும். இது பிரிட்டனின் மிகவும் மேம்படுத்த குழுவாக விளங்குகிறது. பிரிட்டனில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு 4 வாரத்தை எட்டியுள்ள நிலையில், தடுப்பூசி நடவடிக்கையை எளிதாக்கவும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அடிப்படையாக இருக்குமெனவும், அடுத்த 2 வாரங்களில் மனிதருக்கு தடுப்பூசி மருந்தை செலுத்தி சோதனை செய்யும் பணிகள் துவங்குமெனவும் கில்பர்ட் கூறியுள்ளார்.


மில்லியன் கணக்கில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க சில மாதங்கள் ஆகலாம். அதற்கு தேவையான நிதி , இறுதி முடிவுகள் வருவதற்கு முன் மருந்து உற்பத்தியை துவங்குவது மற்றும் தடுப்பூசி வேலை செய்தால் உடனடியாக அதை பொதுமக்களுக்கு செலுத்துவது குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஆலோசித்து வருவதாகவும், எல்லாம் சரியாக நடந்தால் இலையுதிர்காலத்தில் வெற்றி சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image