மும்பையில் மிக பிரபலமான செய்தி நிறுவனமாக 'மும்பை மிரர் நவ்’ செய்தி குழு நிறுவனம் இருந்து வருகிறது. இந்த குழுமத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெக்னிகல் ஆபரேட்டர் , 2 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் 3 பேர் என 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுடன் பணியாற்றிய 37 ஊழியர்களும் மும்பை தாஜ் ஹோட்டலில் தனிமையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர்.