திருப்பூர்; சு.குணசேகரன் எம்.எல்.ஏ., சொந்த செலவில் தொகுதிக்கு ரூ.65 லட்சத்தில் கொரானா நிவாரணம்!
திருப்பூர் தெற்கு தொகுதியில் 

ரூ.65 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை

அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சு.குணசேகரன் எம்.எல்.ஏ., ஆகியோர் அனுப்பி வைத்தனர்

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஏற்பாட்டில், தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட 21 வார்டு பொதுமக்கள் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரண உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது.  கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.65 லட்சம் மதிப்பில், 10 ஆயிரம் சிப்பங்கள் அரிசி, பருப்பு உள்பட 16 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை, எம்.எல்.ஏ., சு.குணசேகரன் திரட்டினார். அவற்றை அனைத்து வார்டுகளுக்கும் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்  தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு, ரூ.65 லட்சம் மதிப்பிலான பொருட்களை, 21 வார்டுகளுக்கும் அனுப்பிவைத்தனர்.

 அவற்றை வார்டு வாரியாக நிர்வாகிகள் அதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், சிட்டி பழனிசாமி, உஷா ரவிக்குமார், ஏ.எஸ்.கண்ணன், கருவம்பாளையம் மணி, கண்னபிரான், தம்பி சண்முகம், ஆண்டவர் பழனிசாமி, ஈஸ்ட்மேன் பழனிசாமி, கே.எம்.சுப்பிரமணி, ராசி சிதம்பரம், கே.சி.எம். துரை, பாரத் டையிங் முருகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image