காங்கயம் ராமபட்டிணத்தில் உயர் மின் கோபுரத்தில் முதியவர் தூக்குமாட்டி தற்கொலை

காங்கயம் அருகில் உள்ள ராமபட்டிணத்தை சேர்ந்த ராமசாமி வயது72. இவர் விவசாம் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியாத்தாள். இவர்களுக்கு வேலுச்சாமி வயது 48, குருசாமி வயது 45 என்று 2 மகன்கள் உள்ளனர். ராமசாமிக்கு சொந்தமாக அந்த பகுதியில் 10 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன் ராமசாமி அவருடைய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க அனுமதி அளித்தார்.


அதற்காக அவருக்கு ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 497  நிவாரணத் தொகையாக வழங்கப் பட்டது. இந்த தொகையையும், 10 ஏக்கர் நிலத்தையும் இருவருக்கும் சரி பாதியாக பிரித்து தருமாறு ராமசாமியின் மகன்கள் தந்தையிடம் கேட்டு வந்துள்ளனர். ஆனால் அவர் கொடுக்காமல் மறுத்துள்ளார். இதனால் தந்தை, மகன்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிலத்தை பிரித்து கொடுக்காமலும், பணத்தை தராமலும் இழுத்தடித்து வந்த தந்தைக்கு மகன்கள் 2 பேரும் கடந்த 6 மாதமாக உணவு வழங்க வில்லை என சொல்லப் படுகிறது .இதனால் மனதளவில் வேதனை அடைந்த ராமசாமி நேற்று தனது நிலத்திற்கு சென்று அவருடைய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விராசரனை மேற்கொண்டுள்ளனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு