துப்புரவு பணியாளர் ஒருவருக்கு பாதபூஜை செய்து, மலர் தூவி மரியாதை செய்த குடும்பம்.
ஒரு உன்னதமான மெய்சிலிர்க்க வைக்கும் செயல் பல்லடத்தில் நடைபெற்று இருக்கிறது.
கொரோனா வைரஸ் பிரச்சினை உலகம் முழுவதும் பரவி வருவதால், மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மூலம் சேவை வழங்கப்படுகிறது.
இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் துப்புரவு பணியாளர்களின் வேலை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்றே சொல்லலாம். அவர்கள் மிகவும் ஆபத்தான வேலை சூழலிலும் பணி செய்கிறார்கள். வீட்டில் யாருக்கு பிரச்சினை இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்து வரும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் ரோடு, 14வது வார்டு கணபதி நகரில் துப்புரவுப்பணியில் இருந்த வசந்தாமணி என்பவருக்கு அப்பகுதியில் வசிக்கும் அம்மு ஸ்டுடியோ மணிகண்டன் குடும்பத்தினர், கொரானா தொற்றிலும் தன் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வார்டு மக்களின் நலனுக்காக தீவிர துப்புரவு பணியில் இருந்த அந்த பெண் தொழிலாளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு பாதை பூஜை செய்தும், மலர் தூவியும், பூ மாலையுடன், பண மாலையும் தூய்மையானவருக்கு அணியப்படுகிறது. மேலும் அவருக்கு உடைகளைையும் வழங்கி கெளரவித்தனர்.
தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இதைவிட வேறு எதுவும் செய்ய முடியும்? இதோ, ஒரு உன்னதமான மெய்சிலிர்க்க வைக்கும் செயல் நடைபெற்று இருக்கிறது.
இதை எவ்வாறு நாம் பாராட்டுவது? அதற்கு என்ன பெயர்? இது இந்தியாவில் பெண்ணியம் ..
இது இந்தியாவின் தாய்மை சக்தி
இதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள்.
எல்லா உயிர்களும் சமமாக நடத்தப்பட்டு, மக்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட்டால், நம் நாட்டுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இது குறித்து பிரபல நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது
குறிப்பிட்டத்தக்கது.