ஊடகத்துறையினருக்கு கொரோனா வைரஸ் குறித்த சோதனைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துருப்பதாவது:-நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு செய்தியாளர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் சென்னையில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊடகத்தினரின் குடும்பங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையிலும் அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும். பொதுமக்களிடம் செய்திகள் வழி கொண்டு செல்லக்கூடிய அத்தியாவசிய பணியை மேற்கொண்டு வரும் ஊடகத்தினரின் பணி இன்றியமையாத சூழ்நிலையில் பரவலாக உள்ள அச்சத்தை போக்கும் வகையில் தமிழக அரசு மாவட்டம் தோறும் உள்ள ஊடகத் துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த சோதனையை மேற்கொள்ள வேண்டுமென திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
ஊடகத்துறையினருக்கு கொரோனா வைரஸ் குறித்த சோதனைக்கு செய்தியாளர்கள் சங்கம் கோரிக்கை!!