திருச்சி; கொரானா நோயாளிகள் இல்லா மாவட்டம். சாதனை! படைத்த டாக்டர்கள்.
கொரானா நோயாளிகள் இல்லா! மாவட்டம். திருச்சி டாக்டர்கள் சாதனை.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த திருச்சியை சேர்ந்த 43 பேரில் 29 பேருக்கும், கரூர், அரியலூர், பெரம்பலூரை சேர்ந்த 3 பேர் என 32 பேருக்கு இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் அட்மிஷனில் உள்ள ஒரு வயது குழந்தை உள்பட 13 பேருக்கும் கூட கொரோனா இல்லை என  ரிப்போர்ட் வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் 2 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்து விட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என டாக்டர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா நேற்று மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து மீதம் உள்ள 13 பேருக்கும் இல்லை என்று ரிசல்ட் வந்துவிட்டது. இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. நம்முடைய (டாக்டர்கள் உள்ளிட்ட குழுவின்) கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம். இந்த வெற்றியை அடைய உதவிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.. கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என்கிற முறைப்படியான அறிவிப்பு எப்போது என்பது தான் தெரியவில்லை.. 

Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020