திருப்பூர்; கைக்குழந்தையுடன் திருவாரூக்கு நடந்து சென்ற தம்பதியினரை காரில் அனுப்பி வைத்த கலெக்டர்!!

கோவையிலிருந்து, திருவாருக்கு செல்ல நடந்து சென்ற தம்பதியினரை மீட்டு, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தனசேகர்-சுகன்யா. இவர்களுக்கு 2 வயதில் அஸ்வின் என்ற குழந்தை உள்ளது. இவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் அடுத்துள்ள முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கைத்தறி ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 2ம் கட்டமாக மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு அரசால் பிறபிக்கப்பட்ட நிலையில், இவர்கள் பணிபுரிந்து வந்த நிறுவனம் இவர்களுக்கு நிதியுதவி மற்றும் உணவு வழங்க மறுத்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற நிலையில் இன்று (17.04.2020) காலை கோவையிலிருந்து கைகுழந்தையோடு நடந்தே செல்ல முடிவெடுத்து  திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்திற்குட்பட்ட வெங்கடேஷ்வரா நகர் அருகே வந்தபோது கை குழந்தையை ஏந்தியபடி நடக்க முடியாமல் மிகவும் சோர்வுற்ற நிலையில் காணப்பட்ட இக்குடும்பத்தினரை தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு அவர்களுக்கு போதிய உணவளித்து ஆறுதல் கூறினர். இத்தகவல் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜய்கார்த்திகேயன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் உடனடியாக மாவட்ட வருவாய்த்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றதின் அடிப்படையில் அவர்களுக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடி வாகன அனுமதி அட்டையை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது வழங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்திலிருந்து பத்திரமாக சொந்த ஊருக்கு (மன்னார்குடி கோட்டூர் ) இன்று மாலை அனுப்பி வைத்தார்.திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயகார்திகேயனின் இப்பேருதவிக்கு தனசேகரன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி தம்பதியினர் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.விஜயகார்த்திகேயன், இவர்களை மீட்டு வாகனத்தில் கொண்டு செல்ல உதவிய தன்னார்வ அமைப்பிற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image