திருப்பூர், காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் மற்றும் 50 வது வார்டு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,சு.குணசேகரன்
வழங்கினார்
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட ராக்கியாபாளையம் பிரிவு, இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 215 பேருக்கு, ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை சாமான்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. சு.குணசேகரன் வழங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுல்நாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் அட்லஸ் சி.லோகநாதன், கேஷியர் முருகேசன், ரங்கநாதன், தனபால் ஆகியோர் உடனிருந்தனர்
இதே போல் திருப்பூர் மாநகராட்சி 50 வது வார்டில் பணிபுரியும் 75 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் ரூபாய் 1000 மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் நா.கணேசன், எஸ்.பி.டெக்ஸ் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.