கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், வடக்கலூர் ஊராச்சிதலைவர் அர்.ராஜ்குமார் ஆலோசனையின் பேரில், தினசரி காலை 8.மணி முதல் இரவு 8 மணி வரை தூய்மை தொழிலாளர்களை கொண்டு வீடு, வீடாக சென்று கொரானா தொற்று கிருமி நாசினி மருந்து அடிக்க உத்தரவிட்டார்.
மேலும் 1வது வார்டு விஜயன், 2வது வார்டு குட்டி கருப்புசாமி,
மற்றும் ஆரான், பத்திரான் பாலன் மூக்கனூர் சுப்பு உள்ளிட்ட ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
இது தவிர கரியாக்கவுண்டனூரில் கொரானா வைரஸ் கிரிமி வராமல் தடுக்கும் வகையில் இயற்கை மருந்துகளான வேப்ப இலை, பச்சை மஞ்சள், எலுமிச்சம்பழம், கொலுமிச்சங்காய் டெட்டால் ஒரு லிட்டர், மஞ்சத்தூள் பிலீச்சிங்பவுடர், சானட்டரி, சோப்கழவை போன்ற இவைகள் அனைத்தும் ஒரு கிரைண்டரில் போட்டு அரைத்து வடிகட்டி எடுத்து இயற்க்கை மருந்து தயார் செய்து அனைத்து வீடுகளிலும் கதவு, சன்னல், பாத்ரூம் என அனைத்து பகுதிகளுக்கும் மருந்தடிக்கப்பட்டது.