திருப்பூரில், கொரோனா வைரஸ் நோயால் 144 தடை உத்தரவில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு காந்தி நகர் ஏ.வீ.பி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. திருப்பூர் காந்தி நகர் ஏ.வீ.பி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் உலகம் முழுவதும் மக்கள் கொரோன வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல லட்சம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய அரசு கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.இதன் மூலம் நோய் தொற்று குறைய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க கடைகளுக்கு செல்கின்றனர். இதன் மூலம் நோய் தொற்று குறைய வாய்ப்புள்ளது மேலும் கொரோனா வைரஸ் நோயால் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.