மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு 15 ரூபாய் தக்காளி 12 ரூபாய் என கூவிக் கூவி விற்பனை செய்து அசத்திய வியாபாரியை நம்ம ஊரு கலெக்டர் விஜயகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது பழைய பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு தக்காளி கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் தக்காளி கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு 12 ரூபாய் என கூவி விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு கூவி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்த திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அந்த வியாபாரியை பாராட்டியுள்ளார். மேலும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.