மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தொமுச சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சரவணன் கூறுகையில், ''கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மின் வாரியத்தில் ஒப்பந்த முறையிலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர். ஊரடங்கு உத்தரவால், வேலை வாய்ப்பும், வருமானமும் இன்றி பரிதவிக்கின்றனர். இந்த தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை