தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோரின் ஆலோசனையின்பேரில்,
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு அசுரவேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னின்று எடுத்து வருகிறார்.
கொரோனா வைரஸ் என்கின்ற கொடிய நோயை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலையில், பல்லடம் நகராட்சிக்கு பகுதிகளில் நகராட்சி, தீயணைப்பு துறை, மற்றும் காவல்துறை, இணைந்து இரண்டாவது கட்டமாக பல்லடம் நகராட்சி பகுதிகளில் உள்ள என்.ஜி.ஆர்.ரோடு, மார்க்கெட், கடைவீதி பகுதிகள், பஸ் நிலைய பகுதிகள், மருத்துவமனை பகுதிகள், திருமண மண்டப பகுதிகள், அரசு பள்ளி பகுதிகள், மங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும் கேத்தனூர், பொங்கலூர், கரைப்புதூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பணியாளர்கள்ஆகிியோர்களுடன் கிருமி நாசினி தெளித்தார்.மேலும் இன்று பல்லடம் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தின் உள்ளே கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து கபசுரக்நீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கரைப்புதூர் ஏ.நடராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் எம்.எல்.ஏ.வின் சொந்த நிதியில் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்பில் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி தெளிப்பு பாதையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். இது தவிர பல்லடம் நகராட்சி, பல்லடம் நகராட்சி வார்டு பகுதிகளுக்கும், பொங்கலூர் ஒன்றியத்தில உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் முக கவசம் ( மாஸ்க்) வழங்கினார்.இதில் நகராட்சி ஆணையாளர் கணேஷ், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், டி.எஸ்.பி. முத்துவேல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலமுருகன், நகராட்சி பொறியாளரப சங்கர், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், அண்ணா தி.மு.க.,நிர்வாகிகள் கோடாங்கிபாளையம் சுப்பிரமணியம், மகளிர் அணி ஞானம்பிகா, பனப்பாளையம் லட்சுமணன், என்.எஸ்.கே.நகர் சரவணன், அண்ணாதுரை, வெள்ளியங்கிரி மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் செய்துவரும் இந்த அரும்பணியினை பார்த்து ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள் தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்.