திருப்பூரில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தை திருப்பூர் மாநகர போலீசார் இன்று கேமரா மூலம் கண்காணித்து எச்ரித்தனர்.
திருப்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்கியிருந்த ஏழு பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் வெளியே செல்லவும், புதியதாக யாரும் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து வெளியேற்றுவதை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள மாஸ்கோ நகர் பகுதியில் திருப்பூர் மாநகர காவல் துறையினர் ஆளில்லா விமானம் (ட்ரோன்) கேமரா மூலம் கண்காணித்து பொதுமக்களை எச்சரித்து வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தினர். கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது.