தமிழகமுதல்வர் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு. குணசேகரன் ஏற்பாட்டின் பேரில், மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.ஆர் நகர் மேற்கு, கண்டியம்மன் நகர், அய்யன் நகர், செல்லம் நகர் பகுதிகளில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து குடும்ப அட்டை இல்லாமல் வாழும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அ.தி.மு.க., மாணவர் அணி செயலாளரும், மாநகராட்சி டவுன் பிளானிங் முன்னாள் தலைவருமான ஆர். அன்பகம் திருப்பதி வழங்கினார்.
திருப்பூர்; கொரானா பாதிப்பில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்க்கு எம்.எல்.ஏ.,குணசேகரன், அன்பகம் திருப்பதி ஆகியோர் உணவு பொருட்கள் வழங்கினர்.